சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது


சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 7 July 2021 12:53 AM IST (Updated: 7 July 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டத்தில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடையாறு ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ராஜேந்திரன்(வயது 31). கூலித்தொழிலாளியான இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 17 வயது சிறுமியை காதலித்து, இருவீட்டார் சம்மதமின்றி திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் பரிசோதனைக்காக துணை சுகாதார நிலையத்திற்கு சென்றபோது சிறுமியின் ஆதார் அட்டையை வாங்கி பார்த்த செவிலியர்கள், சிறுமிக்கு 17 வயதே ஆவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி கிராம செவிலியர் அமுதா, த.சோழன்குறிச்சி கிராம சுகாதார நிலையத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளார். அறிக்கையினை பார்த்த வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன், உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனை போலீசார், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதற்காக குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து ராஜேந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story