புதிதாக 51 பேருக்கு கொரோனா


புதிதாக 51 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 July 2021 1:21 AM IST (Updated: 7 July 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 44,883 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 43,865 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 68 பேர் சிகிச்சைமுடிந்து வீடு திரும்பியுள்ளனர். 486 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை. அரசு ஆஸ்பத்திரிகளில் 272 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை மையங்களில் 32 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாவட்டத்தில் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  நேற்று மாவட்ட பட்டியலில் 33 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மாநில பட்டியலில் 51 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாதிப்பு சதவீதம் 1.5 ஆகும்.

Next Story