மாவட்ட செய்திகள்

லோடு ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு + "||" + Sickle cut for auto driver

லோடு ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு

லோடு ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு
லோடு ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சங்கரன்கோவில்:

சிவகிரி அருகே சங்குபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் சிங்கதுரை (வயது 25). லோடு ஆட்டோ டிரைவரான இவர், கரும்பு தோட்டத்தில் வேலை செய்ய ஆட்களை அழைத்துச் செல்வாராம். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கரும்பு தோட்டத்திற்கு ஆட்களை அழைத்துச் செல்ல லோடு ஆட்டோவில் பனையூர் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பனையூர் கிராமத்தை சேர்ந்த பிரமோத் (26), மதன் (26), மகேந்திரன் (26), ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து (26) ஆகியோர் லோடு ஆட்டோவை வழிமறித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. 

வாக்குவாதம் முற்றவே 4 பேரும் சேர்ந்து சிங்கதுரையை தாக்க முயன்றுள்ளனர். அதை தடுப்பதற்காக தனது லோடு ஆட்டோவில் இருந்த அரிவாளை சிங்கதுரை எடுத்துள்ளார். இதனால் சுதாரித்த 4 பேரும் அரிவாளை பிடுங்கி சிங்கதுரையை வெட்டி விட்டு தப்பி ஓடினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரமோத், இசக்கிமுத்து ஆகிய 2 பேரை கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ஊறுகாய் கம்பெனி மேலாளரிடம் ரூ.30 லட்சம் பறிப்பு: கூலிப்படை தலைவன் உள்பட 2 பேர் கைது
ஊறுகாய் கம்பெனி மேலாளரிடம் கத்திமுனையில் ரூ.30 லட்சத்தை பறித்த சம்பவத்தில் சென்னையை சேர்ந்த கூலிப்படை தலைவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
2. பா.ஜனதா பிரமுகர் கொலையில் 2 பேர் கைது
பா.ஜனதா பிரமுகர் கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
3. கஞ்சா விற்ற 2 பேர் கைது
கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. மண் திருடிய 2 பேர் கைது
மண் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. ஆடு திருடிய 2 பேர் கைது
ஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.