புகையிலை பொருட்கள் விற்ற 18 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 18 பேர் கைது
x
தினத்தந்தி 7 July 2021 1:30 AM IST (Updated: 7 July 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் புகையிலை பொருட்கள் விற்ற 18 பேைர போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி, 
சிவகாசி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து சிவகாசி டி.எஸ்.பி., பாபுபிரசாந்த் உத்தரவின் பேரில் சிவகாசி உட்கோட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக திருத்தங்கல் குமார் (வயது50), முருகானந்தம் (43), கணேசன் (60), பாஸ்கரன் (54), சிவகாசி காந்தி ரோடு கணேசன் (48), மாரிமுத்து தெரு முனியப்பன் (49), குருவன் (61), சிவா (21) உள்பட 18 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story