வேட்டைக்கு சென்ற வாலிபர் மின்வேலியில் சிக்கி பலி
ஆலங்குளம் அருேக வேட்டைக்கு சென்ற வாலிபர் மின்வேலியில் சிக்கி பலியானார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருேக வேட்ைடக்கு சென்ற வாலிபர் மின்வேலியில் சிக்கி பலியானார்.
மின்வேலி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஒக்கநின்றான் பொத்தை அமைந்துள்ளது. இந்த மலையில் முயல், மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன. அவை அடிக்கடி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதனால் பயிர்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக சில தோட்டங்களில் உரிமையாளர்கள் மின்வேலிகளை அமைத்து உள்ளனர்.
வாலிபர் பலி
இந்த நிலையில் நேற்று அதிகாலை அங்குள்ள ஒரு தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து மகன் வள்ளிகுமார் (வயது 28) என்பதும், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் இணைந்து வேட்டைக்கு சென்றபோது மின்வேலியில் சிக்கி அவர் பலியானதும் தெரியவந்தது. ேமலும் நாய் ஒன்றும் அந்த வேலியில் சிக்கி செத்து கிடந்தது.
விசாரணை
இதையடுத்து வள்ளிகுமாரின் உடல் பிேரத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தோட்ட உரிமையாளர் ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டையை சேர்ந்த பால்ராஜை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த வள்ளிகுமாருக்கு சரண்யா (25) என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். வேட்டைக்கு சென்ற இடத்தில் மின்வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story