வாலிபர் கொடூரக்கொலை


வாலிபர் கொடூரக்கொலை
x
தினத்தந்தி 7 July 2021 1:48 AM IST (Updated: 7 July 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

குருவிகுளம் அருகே வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவேங்கடம்:
குருவிகுளம் அருகே வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் கொலை

தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே உள்ள மலையாங்குளம் கிராமத்துக்கு அருகில் ஒரு குளத்துக்குள் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலை, கழுத்து, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்தன.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் குருவிகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜூம் அங்கு வந்து பார்வையிட்டார். 

போலீசார் விசாரணை

கொலை செய்யப்பட்டவரின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. அந்த பகுதியில் காணாமல் போனவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தொலைவில் கார் ஒன்று கேட்பாரற்று நின்றது. அந்த காரின் பதிவு எண்ணை வைத்தும், கொலை செய்யப்பட்டவரின் சட்டையில் உள்ள தகவல்களை வைத்தும் இறந்தவர் யார்? என்பதை கண்டறிய விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். 

அவர் நேற்று முன்தினம் மதியம் அல்லது மாலை கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். சம்பவ இடத்தில் மதுபாட்டில்கள் மற்றும் வாழைப்பழம் உள்ளிட்டவை கிடந்தன. இதனால் மது குடிக்க அழைத்து வந்து அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

பரபரப்பு 

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலை குறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

குளத்துக்குள் வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story