பெண் அழைப்பிற்கு சென்ற போது சரக்கு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து ஒருவர் சாவு 12 பேர் காயம்


பெண் அழைப்பிற்கு சென்ற போது சரக்கு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து ஒருவர் சாவு 12 பேர் காயம்
x
தினத்தந்தி 7 July 2021 2:45 AM IST (Updated: 7 July 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

பெண் அழைப்பிற்கு சென்ற போது சரக்கு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் காயம் அடைந்தனர்.


துறையூர், 
மண்ணச்சநல்லூர் அருகே திருவரங்கப் பட்டியைச் சேர்ந்த மணமகன் வீட்டார் 40 பேர் துறையூர் அருகே கருப்பம்பட்டியில் பெண் அழைப்பு வைபவத்திற்காக 2 சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர். இதில் ஆண்கள் மட்டும் வந்த வாகனம் கருப்பம்பட்டி அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் திருவரங்கப் பட்டியைச் சேர்ந்த பெரியண்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டிரைவர் கோபி உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story