சேலம் மாவட்டத்தில் 228 பேருக்கு கொரோனா தொற்று
சேலம் மாவட்டத்தில் 228 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 228 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
228 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில் 233 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று புதிதாக 228 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 29 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். எடப்பாடியில் 9 பேர், காடையாம்பட்டியில் 5 பேர் கொளத்தூரில் 2 பேர், கொங்கணாபுரத்தில் 3 பேர், மகுடஞ்சாவடியில் 6 பேர், மேச்சேரியில் 8 பேர், நங்கவல்லியில் 5 பேர், ஓமலூரில் 11 பேர், சேலம் ஒன்றிய பகுதிகளில் 2 பேர், சங்ககிரியில் 9 பேர், தாரமங்கலத்தில் 3 பேர் வீரபாண்டியில் 5 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்
மேலும், ஆத்தூர் நகராட்சியில் 4 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 3 பேர், தலைவாசலில் 6 பேர், வாழப்பாடியில் 5 பேர், கெங்கவல்லியில் 2 பேர், அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டியில் தலா ஒருவருக்கும், மேட்டூர் நகராட்சியில் 9 பேரும் பாதிக்கப்பட்டனர்.
சேலம் மாவட்டத்துக்கு நாமக்கல்லில் இருந்து வந்த 13 பேர், கள்ளக்குறிச்சியில் இருந்த வந்த 14 பேர், ஈரோட்டில் இருந்து வந்த 11 பேர், தர்மபுரியில் இருந்து வந்த 13 பேர், சென்னையில் இருந்து வந்த 7 பேர், காஞ்சீபுரத்தில் இருந்து வந்த 9 பேர், திருச்சியில் இருந்து வந்த 8 பேர், கோவையில் இருந்து வந்த 7 பேர், பெரம்பலூரில் இருந்து வந்த 5 பேர், திருவண்ணாமலையில் இருந்து வந்த 7 பேர், கரூரில் இருந்து வந்த 6 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4 பேர் பலி
இவர்கள் சேலத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 89 ஆயிரத்து 747 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 86 ஆயிரத்து 290 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 119 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் நேற்று உயிரிழந்தனர். இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 1,491 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,966 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story