அரசு பள்ளி ஆசிரியர்கள் இன்று முதல் காலை 9 மணிக்குள் பள்ளிக்கு வரவேண்டும்- மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு

அரசு பள்ளி ஆசிரியர்கள் இன்று முதல் காலை 9 மணிக்குள் பள்ளிக்கு வரவேண்டும்- மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு
x
தினத்தந்தி 7 July 2021 3:53 AM IST (Updated: 7 July 2021 3:53 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இன்று முதல் காலை 9 மணிக்குள் பள்ளிக்கு வரவேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இன்று முதல் காலை 9 மணிக்குள் பள்ளிக்கு வரவேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
மாணவர் சேர்க்கை
சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அரசு தெரிவித்து உள்ள நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி கடந்த மாதம் 28-ந் தேதி முதல் மாவட்டத்தில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஆசிரியர்களும் இன்று (புதன்கிழமை) முதல் காலை 9 மணிக்குள் பள்ளிக்கு வரவேண்டும்.
கல்வி தொலைக்காட்சி
ஆசிரியர்கள் பள்ளியில் மாணவர் சேர்க்கை பணியில் ஈடுபடவேண்டும். மதிப்பெண்கள் சரிபார்த்தல், மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் வகுப்புகள் ஆகிய பணிகளில் ஈடுபடவேண்டும். அதே போன்று 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இதுவரை பிளஸ்-1 வகுப்பில் சேராத மாணவர்களை தொடர்பு கொண்டு அவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்கள் நலன் சார்ந்த பணிகளில் ஈடுபட வேண்டும். 
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

Next Story