பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் மனித நேய மக்கள் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் மனித நேய மக்கள் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 July 2021 9:52 AM IST (Updated: 7 July 2021 9:52 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் மனித நேய மக்கள் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்.

தாம்பரம்,

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டிக்கும் விதமாக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆட்டோ மற்றும் கியாஸ் சிலிண்டரை மாட்டு வண்டியில் ஏற்றி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ஜாகீர் உசேன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளரும், மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ.வுமான அப்துல் சமது, மாநில துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாகூப் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைடுத்து எம்.எல்.ஏ. அப்துல் சமது நிருபர்களிடம் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் பெட்ரோல், டீசல் வரி தொகையை மத்திய அரசு குறைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு இதனை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது கலந்து கொண்டார். இதில் த.மு.மு.க. மாநில செயலாளர் சலீமுல்லாகான், மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் கே.அப்துல் சலாம், மாவட்டச் செயலாளர் ஈ.எம்.ரசூல், வட சென்னை மாவட்டத் தலைவர் நசுரூதீன், மாவட்டச் செயலாளர் எச்.நசீர் உசேன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story