கோவில்பட்டி அருகே பொக்லைன் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை


கோவில்பட்டி அருகே பொக்லைன் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 July 2021 5:13 PM IST (Updated: 7 July 2021 5:13 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே பொக்லைன் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி சுல்லக்கார தெருவை சேர்ந்த ராஜன் மகன் மகேந்திரன் (வயது 22). இவர் பொக்லைன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். மேலும், பெற்றோர் இறந்து விட்டதால், தனது பாட்டி பேச்சியம்மாள் ( 74) என்பவருடன் வசித்து வந்தார்.
நேற்று காலையில் பேச்சியம்மாள் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது மகேந்திரன் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி யடைந்த பேச்சியம்மாள் கூச்சல் போட்டு அழுதார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில்  நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் அங்குத் தாய், சுப்புராஜ் ஆகியோர் மகேந்திரன் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story