குலசேகரன்பட்டினம் பகுதியில் கஞ்சா விற்ற 3பேர் கைது
குலசேகரன்பட்டினம் பகுதியில் கஞ்சா விற்ற 3பேரை போலீசார் கைது செய்தனர்
குலசேகரன்பட்டினம்:
திருச்செந்தூர் போலீஸ் உதவி சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மேற்பார்வையில் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையற்கரசி தலைமையில் தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் சுந்தரம், குலசேகரன்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அமராபுரம் பஸ் நிறுத்தம் அருகே மணப்பாடு ராஜா தெருவைச் சேர்ந்த ஜோசப் மகன் ரூபன் (வயது39), உடன்குடிபஸ் நிறுத்தம் அருகே உடன்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் மகன் சிவபெருமாள் (22) மற்றும் தாமரைமொழி பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் கார்த்திமுத்து (30) ஆகியோரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரையும் பிடித்து அவர்களிடம் இருந்த 1 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூபன், சிவபெருமாள் மற்றும் கார்த்திமுத்து ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story