கியாஸ் சிலிண்டர்களுக்கு பாடை கட்டி ஊர்வலம்


கியாஸ் சிலிண்டர்களுக்கு பாடை கட்டி ஊர்வலம்
x
தினத்தந்தி 7 July 2021 6:18 PM IST (Updated: 7 July 2021 6:47 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் கியாஸ் சிலிண்டர்களுக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வந்தவாசி,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வந்தவாசி பழைய பஸ் நிலையம் அருகில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் முகமது ரபி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக நிர்வாகியான திருப்பத்தூர் சனாவுல்லா கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.  
 
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும், கார்ப்பரேட் கம்பெனிகளின் கையில் உள்ள பெட்ரோல் விலை நிர்ணயத்தை மத்திய அரசு நிர்ணயிக்க வலியுறுத்தியும், ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைைய கொண்டுவர வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

முன்னதாக கோட்டைமுனை பகுதியிலிருந்து பஸ் நிலையம் வரை கியாஸ் சிலிண்டர்களை பாடைகட்டி ஊர்வலமாக கொண்டு வந்தனர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் ஜமால், நகர செயலாளர் அப்துல் துணைச் செயலாளர் ஓட்டல் குட்ட மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story