தரமற்ற முறையில் நடக்கும் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி. தடுத்து நிறுத்தி பொதுமக்கள் வாக்குவாதம்


தரமற்ற முறையில் நடக்கும்  கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி. தடுத்து நிறுத்தி பொதுமக்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 7 July 2021 7:30 PM IST (Updated: 7 July 2021 7:30 PM IST)
t-max-icont-min-icon

வாணாபுரத்தில் தரமற்ற முறையில் நடக்கும் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாணாபுரம்
கால்வாய் கட்டும் பணி

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது வாணாபுரம். இங்கு வடக்கு தெரு, தெற்கு தெரு, கோவில் தெரு, கள்ளக்குறிச்சி சாலை, திருவண்ணாமலை சாலை உள்பட பல பகுதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 

புதுத்தெரு பகுதியில் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லாததால் சாக்கடை நீர் தெருவில் ஓடியது. இதனால் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. 

புதுத்தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது.

பொதுமக்கள் வாக்குவாதம்

கால்வாய் கட்டும் பணி தரமற்ற முறையில் நடப்பதாகவும், கட்டுமானப் பணி நிறைவடைவதற்குள் உடைந்து கீழே விழுவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டினர். அப்பகுதியை சேர்ந்த பலர் திரண்டு வந்து கால்வாய் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி தரமான முறையில் கால்வாய் கட்ட வேண்டும் என வாக்குவாரத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story