பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 July 2021 8:07 PM IST (Updated: 7 July 2021 8:07 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி : 

தேனி மாவட்டம் கம்பம் தியாகி வெங்கடாச்சலம் தெருவை சேர்ந்தவர் அன்புகணேஷ் (வயது 46). தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி வெங்கடேஸ்வரி. 

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அன்புகணேஷ் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள ஒரு அறைக்கு அவர் தூங்க சென்றார். 

நேற்று காலையில் வெகுநேரமாகியும் அறை கதவு திறக்கப்படாமல் இருந்தது. உடனே வெங்கடேஸ்வரி கதவை தட்டி பார்த்தார். ஆனால் அன்புகணேஷ் கதவை திறக்கவில்லை. 

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வெங்கடேஸ்வரி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அன்புகணேஷ் சேலையால் தூக்கிட்டு பிணமாக தொங்கினார். இதனை பார்த்த அவருடைய மனைவி கதறி அழுதார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அன்புகணேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story