கோவில்பட்டியில் சமையல் எண்ணெய் மறுசுழற்சி விழிப்புணர்வு கூட்டம்


கோவில்பட்டியில் சமையல் எண்ணெய் மறுசுழற்சி விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 7 July 2021 8:10 PM IST (Updated: 7 July 2021 8:10 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் சமையல் எண்ணெய் மறுசுழற்சி வழிப்புணர்வு கூட்டம் நடந்தது

கோவில்பட்டி:
கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை உணவு பாதுகாப்பு பிரிவு சார்பில் பயன் படுத்திய சமையல் எண்ணை மறுசுழற்சி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது.
சேமிப்பு மண்டலத் தலைவர்  ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு துறை) டாக்டர் மாரியப்பன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவகுமார் ஆகியோர் பயன்படுத்திய சமையல் எண்ணெய் மறுசுழற்சி பயன்பாடு குறித்த விவரங்களை விளக்கி கூறினர்.
கூட்டத்தில் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கார்தீஸ்வரன், செயலாளர் கண்ணன் மற்றும் ஓட்டல், பேக்கரி, கடலை மிட்டாய், உணவு பொருட்கள் தயாரிப் பாளர்கள், விற்பனை யாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணை செயலாளர் வெங்கடேஷ் வரன் நன்றி கூறினார்.

Next Story