திருப்பூர் 15வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இந்த ஆண்டு கூடுதலாக 420 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.


திருப்பூர் 15வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இந்த ஆண்டு கூடுதலாக 420 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
x
தினத்தந்தி 7 July 2021 9:40 PM IST (Updated: 7 July 2021 9:40 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் 15வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இந்த ஆண்டு கூடுதலாக 420 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அனுப்பர்பாளையம்
திருப்பூர் 15வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இந்த ஆண்டு கூடுதலாக 420 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 
நடுநிலைப்பள்ளி
கடந்த 1919-ம் ஆண்டு ஒருசில மாணவர்களுடன் தின்னை  பள்ளியாக தொடங்கப்பட்ட 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி நூற்றாண்டை கடந்து பல்வேறு பெருமைக்குரிய பள்ளியாக உருவெடுத்து உள்ளது. இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர் மருத்துவர்கள், பொறியாளர்கள், காவல்துறை மற்றும் அரசு உயர் பதவிகளில் உள்ளனர். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் முழு ஒத்துழைப்புடன் நவீன வகுப்பறைகள், மாணவர்களுக்கு தேவையான வசதிகளுடன் அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்களால் தரமான கல்வியை வழங்குவதன் மூலமாக பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
 குறிப்பாக தனியார் பள்ளிகளில் படிக்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் கொரோனா ஊரடங்கு பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார பாதிப்புக்குள்ளான ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து மாற்று சான்றிதழை வாங்கிய நிலையில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சேர்த்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1,224-ஆக இருந்த நிலையில் தற்போது 1660-ஆக உயர்ந்துள்ளது. 
அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளி
இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி பள்ளிகளிலேயே அதிக மாணவர்கள் படிக்கும் முதல் பள்ளி என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் இந்த கல்வி ஆண்டில் மட்டும் 420 மாணவ-மாணவிகள் இந்த பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ளனர். இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்திலேயே மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் அதிக மாணவர் சேர்க்கை நடைபெற்ற பள்ளி என்ற புதிய சாதனையையும் இப்பள்ளி நிகழ்த்தியுள்ளது. இதன்படி கே.ஜி. வகுப்புகளில் 70 பேரும், ஒன்றாம் வகுப்பில் 150 பேரும், 2-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 200 பேர் என மொத்தம் 420 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
 திருப்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் அனைத்து வசதிகளையும், நல்ல உள் கட்டமைப்பையும் பெற்று, தனியார் பள்ளிக்கு இணையாக தரமான கல்வியை வழங்கி வந்தாலும், இந்த ஆண்டு ஏராளமான புதிய மாணவர்கள் சேர்ந்துள்ளதால் கூடுதல் ஆசிரியர்கள் தேவை என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. தலைமை ஆசிரியர் உள்பட 29 ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ள நிலையில் மேலும் கூடுதல் வகுப்பறைகளும் தேவையாக உள்ளது. 
அர்ப்பணிப்பு 
இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை ராதாமணி கூறியதாவது:-
 தமிழக அரசு கல்வித்துறைக்கு கொடுக்கும் முக்கியத்துவம், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முழு ஒத்துழைப்பு போன்றவை ஆண்டுதோறும் பள்ளியின் வளர்ச்சி மேம்பட உதவுகிறது. இதன் காரணமாகவே இந்த பள்ளியில் சேர சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக இந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் சேர்க்கையில் 90 சதவீத மாணவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். 
மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் ஆசிரியர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறோம். கடந்த 1½ ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு பள்ளியை திறக்க எப்போது உத்தரவிட்டாலும் உடனடியாக பணியாற்ற தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story