திட்ட இயக்குனர் ஆய்வு
உத்தமபாளையம் ஒன்றியத்தில் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.
தேனி:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியம் லட்சுமிநாயக்கன்பட்டியில் தந்தை பெரியார் சமத்துவபுரம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இங்கு உள்ள வீடுகள் போதிய பராமரிப்பு இன்றி இருந்தது.
இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் சமத்துவபுரங்களில் உள்ள வீடுகளை சீரமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று லட்சுமி நாயக்கன்பட்டியில் உள்ள சமத்துவபுரத்துக்கு மாவட்ட திட்ட இயக்குனர் மணி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு வசிப்பவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர்கள் வீடுகளை திட்ட இயக்குனர் பார்வையிட்டார்.
ஆய்வின்போது உத்தமபாளையம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அய்யப்பன், திருப்பதி வாசகன், ஊராட்சி மன்ற தலைவர் செல்லப்பா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story