இலவச வீடு கேட்டு மக்கள் மனு
தேனி கலெக்டர் அலுவலகத்தில் இலவச வீடு கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
தேனி:
தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில், தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50 பேர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.
மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம், அந்த மக்கள் தங்களுக்கு இலவச வீடு கேட்டு தனித்தனியாக கோரிக்கை மனு அளித்தனர்.
மனு அளித்த பின்னர் நிருபர்களிடம் தங்கதமிழ்செல்வன் கூறுகையில், "இந்த மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த வீடுகள் இல்லாமல் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் இலவசமாக வீடு வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் ஏற்கனவே மனு அளித்து இருந்தேன்.
தற்போது அந்த மக்களின் சார்பில் தனித்தனியாக கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளன. போடி தொகுதி மக்கள் பலரும் தங்களின் பிரச்சினைகளை என்னிடம் தெரிவிக்கிறார்கள்.
அந்த தொகுதியில் நீண்டகாலமாக உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்க அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறேன். அரசும் மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுத்து வருகிறது" என்றார்.
Related Tags :
Next Story