வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில்230 பேருக்கு கொரோனா, தொற்றுக்கு 7 பேர் பலி
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் 230 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
ராணிப்பேட்டை
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 50-க்கும் கீழ் பதிவாகி வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் மேலும் 46 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.
அதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் இதுவரை 47 ஆயிரத்து 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 45 ஆயிரத்து 662 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 500-க்கும் குறைவான நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனாவினால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற வந்த 2 பேர் நேற்று உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில 53 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டு 504 பேர் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று சற்று அதிகரித்து 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் நேற்று 11 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டம் முழுவதும் 212 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 107 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 343 ஆக உயர்ந்துள்ளது. இதில் 48 ஆயிரத்து 480 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். தற்போது 1,251 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு நேற்று ஒருவர் உயிரிழந்தார். மாவட்டத்தில் இதுவரை 612 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.
Related Tags :
Next Story