கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் கைது


கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் கைது
x
தினத்தந்தி 7 July 2021 10:35 PM IST (Updated: 7 July 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் கைது செய்யப்ப்டடனர்.

சாயல்குடி, 
சாயல்குடி அரண்மனை தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் பாண்டியன். பெருநாழி கிராமத்தை சேர்ந்தவ முனியசாமி மகன்கள் சுந்தரபாண்டியன், செந்தில். இவர்களுக்குள் சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று தங்கராஜ்பாண்டியன் இருவேலி பகுதியில் உள்ள புதிய வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற சுந்தரபாண்டியன், செந்தில் ஆகியோருடன் எம்.கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த சந்திரபோஸ் மற்றும் 3 பேர் சேர்ந்து தங்கராஜ் பாண்டியனை தாக்கி வீட்டில் உள்ள கண்ணாடி மற்றும் அலங்காரபொருட்களை அடித்து நொறுக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் 6 பேர் மீது சாயல்குடி இன்ஸ்பெக்டர் விக்னேசுவரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story