35 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது


35 கர்ப்பிணிகளுக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 7 July 2021 10:36 PM IST (Updated: 7 July 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

35 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

வேலூர்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும், அதனால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கவும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 3 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 
மாவட்டம் முழுவதும் 11 நிரந்தர தடுப்பூசி முகாம்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் தினமும் பொதுமக்கள் தடுப்பூசி போட்டு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 5-ந் தேதி முதல் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகள் வழக்கமாக பரிசோதனைக்கு செல்லும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. 
அதன்படி 3 நாட்களில் 35 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

பலருக்கு தடுப்பூசி போட்டு கொண்டால் ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் காணப்படுகிறது. அதனை போக்க அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. பாலூட்டும் தாய்மார்கள் 800 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story