சிதம்பரத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


சிதம்பரத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 July 2021 10:40 PM IST (Updated: 7 July 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சிதம்பரம், 

சிதம்பரம் அருகே உள்ள இளநாங்கூர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகள் சிவரஞ்சனி (வயது 17). இவருக்கு வயிற்றுவலி இருந்துள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் குணமாகவில்லை.

இதனால் மனமுடைந்து இருந்த சிவரஞ்சனி நேற்று முன்தினம் வீ்ட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதைப்பார்த்த அவரது தந்தை ராமமூர்த்தி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிவரஞ்சனியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். 


அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவரஞ்சனி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story