புதிதாக 385 பேருக்கு கொரோனா
புதிதாக 385 பேருக்கு கொரோனா
கோவை
கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிட்ட தகவலின்படி மாவட்டத்தில் புதிதாக 3,85 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 23 ஆயிரத்து 277 ஆக அதிகரித்து உள்ளது.கொரோனா பாதிப்பால் நேற்று 56 வயது பெண், 73 மற்றும் 74 வயது மூதாட்டிகள், 81 வயது முதியவர் என 4 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர்.
இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,085 ஆக அதிகரித்துள்ளது.நேற்று ஒரே நாளில் 291 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 541 ஆக உயர்ந்து உள்ளது.
தற்போது இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் 3,651 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்து 986 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 112 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன்மூலம் 27 ஆயிரத்து 961 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் இதுவரை 166 பேர் இறந்தனர். தற்போது 859 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story