குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடி கடன்


குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடி கடன்
x
தினத்தந்தி 7 July 2021 10:51 PM IST (Updated: 7 July 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடி கடனை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

ஊட்டி,

தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

 நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உள்ள 15 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.03 கோடி வங்கி கடன் உதவிக்கான காசோலைகளை வழங்கினார். 

இதன் மூலம் குழுவில் உள்ள பெண்கள் சுயதொழில் தொடங்கி, பொருளாதாரம் முன்னேற்றம் அடைய இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story