1,000 மதுபாட்டில்கள் பறிமுதல்
வேடசந்தூரில், பார்களில் பதுக்கி வைத்திருந்த 1,000 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள மதுபார்களில், பதுக்கி வைத்து மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வேடசந்தூர் பஸ்நிலையம், ஆத்துமேடு பகுதியில் உள்ள மதுபார்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த பார்களில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து விற்பனை செய்வதற்காக அங்கு பதுக்கி வைத்திருந்த 1,045 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசாரை கண்டதும் மதுபார்களில் இருந்த ஊழியர்கள் தப்பி ஓடி விட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பார் ஊழியர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதேபோல் எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது பில்லமநாயக்கன்பட்டி, கோவிலூர் எம்.ஜி.ஆர்.நகர், மத்தனம்பட்டி, சாமிமுத்தன்பட்டி ஆகிய இடங்களில் மதுபானம் விற்பனை செய்த பழனிசாமி (வயது 55), திருமுருகன் (41), பாண்டியராஜ் (42), வேளாங்கண்ணி (40) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 68 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story