மாவட்ட செய்திகள்

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; ஓய்வு பெற்ற வன அலுவலர் பலி + "||" + Forest officer killed

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; ஓய்வு பெற்ற வன அலுவலர் பலி

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; ஓய்வு பெற்ற வன அலுவலர் பலி
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஓய்வு பெற்ற வன அலுவலர் பலியானார்.
நெல்லை:

நெல்லை கே.டி.சி.நகர் அருணாசலம் நகரைச் சேர்ந்தவர் சொரிமுத்து (வயது 68). ஓய்வுபெற்ற வன அலுவலரான இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் நெல்லை சீனிவாச நகர் - ரெட்டியார்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ரெயில்வே மேம்பாலம் பகுதியில் சென்றபோது, சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சொரிமுத்து உயிருக்கு போராடினார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சொரிமுத்து நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பவானி அருகே ஆவின் பால் ஏற்றி வந்த வேன் மோதி மாணவி பலி
பவானி அருகே ஆவின் பால் ஏற்றி வந்த வேன் மோதி மாணவி பலி ஆனார்.
2. விருந்துக்கு சென்ற புதுமாப்பிள்ளை பரிதாப சாவு
கயத்தாறு அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விருந்துக்கு சென்று திரும்பிய புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
3. விபத்தில் தொழிலாளி சாவு
சங்கரன்கோவில் அருகே விபத்தில் தொழிலாளி பலியானார்.
4. குருவிகுளம் அருகே விபத்து: தாய்-மகன் பரிதாப சாவு
குருவிகுளம் அருகே சாலையோர தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாய்-மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
5. ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் விபத்தில் பலி
ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் விபத்தில் பலியானார்.