மேலும் 47 பேருக்கு கொரோனா


மேலும் 47 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 July 2021 1:09 AM IST (Updated: 8 July 2021 1:09 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால்  பாதிப்பு எண்ணிக்கை 44,980 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 43,914 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 49 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 483 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். நோய் பாதிப்பிற்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 534 ஆக உயர்ந்துள்ளது. 
அரசு ஆஸ்பத்திரிகளில் 261 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை மையங்களில் 18 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மாவட்டத்தில் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  நேற்று மாவட்ட பட்டியலில் 16 பேருக்கும், மாநில பட்டியலில் 47 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 1.5 ஆகும்.

Next Story