பெரியகுளம் கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த பலத்த மழை காரணமாக பெரியகுளம் கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த பலத்த மழை காரணமாக பெரியகுளம் கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பலத்த மழை
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் ஆண்டாள் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. அத்துடன் எண்ணற்ற மரங்களும் சேதமடைந்தன. இந்தநிலையில் பலத்த மழையினால் நீர்நிலையில் நீர்வரத்து அதிகரித்தது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கண்மாய் மற்றும் குளங்களில் மிகவும் பெரியது ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய். இந்த கண்மாய்க்கு பலத்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நிரம்பியது கண்மாய்
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தொடர்மழையின் காரணமாக பெரியகுளம் கண்மாயில் நீர் வரத்து அதிகரித்ததுடன், கண்மாய் நிரம்பி உள்ளது. தற்போதைய நிலவரப்படி பெரியகுளம் கண்மாயை பொறுத்தவரை 3 மாதத்திற்கு ேதவையான தண்ணீர் உள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்தால் கூடுதலாகவும் தண்ணீர் தேங்கிவைக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story