தொழில் நஷ்டத்தால் மீன் வியாபாரி தற்கொலை
தக்கலை அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மீன் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பத்மநாபபுரம்,
தக்கலை அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மீன் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மீன் வியாபாரி
தக்கலை அருகே திருவிதாங்கோடு துரப்பு பகுதியை சேர்ந்தவர் செய்யதுஅலி (வயது 39), மீன் வியாபாரி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். செய்யது அலி மீன் வியாபாரம் செய்வதற்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். கடன் கொடுத்தவர்களும் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக செய்யது அலி மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் வியாபாரத்ைத முடித்து விட்டு வீட்டுக்கு வந்து தனது அறையில் இருந்தார். அவரது அறையில் இருந்து வந்த சத்தம் கேட்டு குடும்பத்தினர் சென்று பார்த்தனர். அப்போது, தூக்கில் செய்யதுஅலி தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே செய்யது அலி இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து அவரது மனைவி சாபிரா கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story