விபத்தில் காயம் அடைந்த கிராம நிர்வாக அதிகாரி சாவு


விபத்தில் காயம் அடைந்த கிராம நிர்வாக அதிகாரி சாவு
x
தினத்தந்தி 8 July 2021 2:23 AM IST (Updated: 8 July 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் அருேக விபத்தில் காயம் அடைந்த கிராம நிர்வாக அதிகாரி பரிதாபமாக இறந்தார்.

பாபநாசம்:
பாபநாசம் அருேக விபத்தில் காயம் அடைந்த கிராம நிர்வாக அதிகாரி பரிதாபமாக இறந்தார். 
கிராம நிர்வாக அதிகாரி சாவு
தஞ்சை தென் வெட்டுக்கார தெருவை சேர்ந்தவர் செந்தில் வடிவேலன் (வயது56). இவர் கும்பகோணம் தாலுகா மாங்குடி கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தார். பாபநாசம் அருகே ராஜகிரி நாயக்கர் தெரு மெயின் ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. 
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செந்தில் வடிவேலன், பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி செந்தில்வடிவேலன் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். 
போலீசார் விசாரணை
இதுகுறித்து அவருடைய மகன் சந்திரன் (31) பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story