சேலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்-கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவு
சேலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களை திடீரென பணி இட மாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டு உள்ளார்.
சேலம்:
சேலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களை திடீரென பணி இட மாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டு உள்ளார்.
பணி இடமாற்றம்
சேலம் மாநகரில் 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டு உள்ளார். அதன்படி சேலம் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் கன்னங்குறிச்சிக்கும், இன்ஸ்பெக்டர் இந்திரா சிறார் சீர்திருத்தப்பள்ளிக்கும் மாற்றப்பட்டு உள்ளார்.
சேலம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவகுமார் சூரமங்கலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டு உள்ளார்.
சப்-இன்ஸ்பெக்டர்கள்
இதே போன்று கருப்பூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் சத்யமூர்த்தி, சேலம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார். அதே போன்று செவ்வாய்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, கருப்பூருக்கும், சேலம் அரசு ஆஸ்பத்திரி புறக்காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த கோகிலா, கொண்டலாம்பட்டிக்கும், அழகாபுரத்தில் பணியாற்றி வந்த ஜெயக்குமார், அரசு ஆஸ்பத்திரி புறக்காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டு உள்ளார்.
அதே போன்று கொண்டலாம்பட்டியில் பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன் கிச்சிப்பாளையத்திற்கும், கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்த அமிர்தலிங்கம் செவ்வாய்பேட்டைக்கும் மாற்றப்பட்டு உள்ளார்.
Related Tags :
Next Story