சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரூ.20 லட்சம் வெள்ளி பொருட்கள் சிக்கின-ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நடவடிக்கை


சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரூ.20 லட்சம் வெள்ளி பொருட்கள் சிக்கின-ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 8 July 2021 4:44 AM IST (Updated: 8 July 2021 4:44 AM IST)
t-max-icont-min-icon

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் சிக்கின.

சூரமங்கலம்:
சேலம் ஜங்ஷன்ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் 5-வது பிளாட்பாரத்தில் இன்ஸ்பெக்டர் அரவிந்த் குமார் தலைமையில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரோந்து சென்றனர். அங்கு எர்ணாகுளம் - பிலாஸ்பூர் (08228) சிறப்பு ரெயில் 5-வது பிளாட்பாரத்திற்கு வந்தது, அந்தரெயிலில் சோதனை நடத்தியபோது சுரங்கப் பாதையில் செல்வதற்கான வழியில் சந்தேகப்படும்படியான நபர் இரண்டு பைகளுடன் இருந்ததை கண்டு விசாரணை மேற்கொண்டனர்
விசாரணையில் அவர்கள் வைத்திருந்த பையில் வெள்ளி பொருட்கள் இருந்தது தெரியவந்தது, மேலும் அதற்கான ஆவணங்கள் உள்ளதா ?என்று போலீசார் கேட்டபோது ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது, இதையடுத்து 28.9 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சேலம் குகை பகுதியை சேர்ந்த ஜாபர் உசேனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிபட்ட வெள்ளியின் மதிப்பு சுமார் 19 ஆயிரத்து 94 ஆயிரத்து 100 ரூபாய் இருக்கும் என ரெயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்,

Next Story