அரியானாவில் இருந்து சரக்கு ரெயிலில் 2,600 டன் கோதுமை திருச்சிக்கு வந்திறங்கியது
அரியானா மாநிலத்தில் இருந்து திருச்சிக்கு சரக்கு ரெயில் மூலம் 2,600 டன் கோதுமை கொண்டு வரப்பட்டது.
அரியானாவில் இருந்து சரக்கு ரெயிலில்
2,600 டன் கோதுமை திருச்சிக்கு வந்திறங்கியது
திருச்சி,
அரியானா மாநிலத்தில் இருந்து திருச்சிக்கு சரக்கு ரெயில் மூலம் 2,600 டன் கோதுமை கொண்டு வரப்பட்டது.
வாழ்வாதாரம் பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. தற்போது ஊரடங்கு மற்றும் தடுப்பூசி காரணமாக வெகுவாக குறைந்து விட்டது. திருச்சி மாவட்டத்திலும் பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது.
இருப்பினும் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டு கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ஆகையால் மத்திய அரசு மூலம் ‘பிரதம மந்திரி கரிப் யோஜனா' திட்டத்தின் கீழ் நபர் ஒருவருக்குதலா 5 கிலோ கோதுமை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இத்திட்டத்தை இந்திய உணவு கழகம் செயல்படுத்தி வருகிறது.
2,600 டன் கோதுமை வருகை
இத்திட்டத்தின்படி, திருச்சி மாவட்டத்திற்கு ரேஷன் கடைகள் மூலம், ஒரு கார்டுக்கு தலா 5 கிலோ வீதம் கோதுமை வழங்கப்படுகிறது. இதற்காக, அரியானா மாநிலம் பாகட் என்ற இடத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 42 வேகன்களில் 2,600 டன் கோதுமை நேற்று திருச்சி முதலியார் சத்திரம் குட்ஷெட்டிற்கு வந்தது.அதனை திருச்சியில் உள்ள இந்திய உணவுக்கழக அதிகாரிகள் முன்னிலையில் தொழிலாளர்கள் மூலம் லாரிகளில் ஏற்றப்பட்டு, பாதுகாப்பாக திருச்சி கே.கே.நகரில் உள்ள தமிழ்நாடு உணவு சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
1,300 டன் யூரியா
இதுபோல கர்நாடகா மாநிலத்தில் இருந்து நேற்று சரக்கு ரெயிலில் 21 வேகன்களில் 1,300 டன் உரமூட்டைகள் திருச்சி குட்ஷெட்டிற்கு வந்தது. அவைலாரிகளில் ஏற்றப்பட்டு டெல்டா மாவட்டங்களில் உள்ள உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டன.
Related Tags :
Next Story