திருமணமான 3 மாதத்தில் பரிதாபம் 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை


திருமணமான 3 மாதத்தில் பரிதாபம் 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 8 July 2021 10:21 AM IST (Updated: 8 July 2021 10:21 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத் தகராறில் திருமணமான 3 மாதத்திலேயே 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பூர்,

சென்னை மண்ணடி எம்.கே.கார்டன் தெருவை சேர்ந்தவர் முகம்மது சுல்தான். இவர், சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஆஜிரா (வயது 19). இவர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆனது. இவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

முகம்மது சுல்தான், அவருடைய அண்ணன் சலீம் அகமது, அவருடைய மனைவி பஸ்ஸிம்ஜான் மற்றும் மைத்துனர் ஆகியோர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர்.

4-வது மாடியில் இருந்து....

முகம்மது சுல்தானின் மனைவி ஆஜிராவுக்கும், அவருடைய அண்ணன் மனைவி பஸ்ஸிம்ஜானிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ஆஜிரா, வீட்டின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் தலை, கை, கால் என உடல் முழுவதும் படுகாயம் அடைந்த ஆஜிரா, அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story