பழவேற்காடு முகத்துவாரத்தை மீன்வளத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு


பழவேற்காடு முகத்துவாரத்தை மீன்வளத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 8 July 2021 11:57 AM IST (Updated: 8 July 2021 11:57 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அடுத்த பழவேற்காடு முகத்துவாரத்தை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரியை வாழ்வாதாரமாக கொண்டு பழவேற்காடு மற்றும் அதனை சுற்றி உள்ள 54 மீனவ கிராமங்களில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர்.

பருவகாலம் மாற்றத்தினாலும், கடல் சீற்றத்தாலும் பழவேற்காடு ஏரி முகத்துவாரம் பகுதியில் மணல் திட்டுகள் உருவாகி முகத்துவார பகுதியில் அடைப்பு ஏற்பட்டு மீன் பிடிக்க இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே பழவேற்காடு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழவேற்காடு முகத்துவார பகுதியை நிரந்தரமாக தூர்வாரும் பணிக்காக தமிழக அரசால் 2014-ம் ஆண்டு ரூ.40 லட்ச செலவில் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டது.

இந்த நிலையில் பழவேற்காடு ஏரியில் நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் பணிக்காக ரூ.26 கோடியே 85 லட்சம் மதிப்பில் அனுமதி வழங்கியது. பழவேற்காடு ஏரி தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலத்தில் இடைப்பட்ட எல்லைப் பகுதி என்பதால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணையவழி பதிவு மேற்கொள்ளப்பட்டது.

முகத்துவாரத்தில் ஆய்வு

பழவேற்காடு ஏரியில் நிரந்தரமாக முகத்துவாரம் அமைப்பது தொடர்பாக பழவேற்காடு பகுதி பொதுமக்களிடம் கலெக்டர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அதன் விவரங்கள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பழவேற்காடு ஏரியில் நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் பணியை செயல்படுத்திட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை எதிர்நோக்கியுள்ள நிலையில், நேற்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் முகத்துவாரத்திற்கு வந்து ஆய்வு செய்து மீனவர்களிடையே கருத்துகளை கேட்டறிந்தார்.

அப்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பிஜான்வர்கீஸ், எம்.எல்.ஏ.க்கள் துரைசந்திரசேகர், டிஜே.கோவிந்தராஜன், எபினேசர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, மீஞ்சூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரமேஷ்ராஜ் மீன்வளத்துறை இணை இயக்குனர் ஜீட் ஆம்ஸ்டாங், உதவி இயக்குனர் அஜய்ஆனந்த் உள்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.

Next Story