கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி மெயின் ரோடு கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் கட்டப் பட்டுள்ள தரை பாலத்தை உயர்த்தி, அகலப்படுத்த வேண்டும். ஓடையில் ஓடு தளம் அமைத்து, இருபுறமும் சுவர் கட்ட வேண்டும். சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க, பாலத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி பாலத்தின் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், நகர குழு உறுப்பினர்கள் முருகன், சக்திவேல் முருகன், முன்னாள் நகர செயலாளர் ராமசுப்பு, கட்டுமான சங்கத் தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story