தண்டராம்படடு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை


தண்டராம்படடு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 8 July 2021 7:33 PM IST (Updated: 8 July 2021 7:33 PM IST)
t-max-icont-min-icon

தண்டராம்படடு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தண்டராம்பட்டு

முறைகேடு புகார்

தண்டராம்பட்டு - சாத்தனூர் செல்லும் சாலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு விவசாயிகளிடம் அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யாமல், வியாபாரிகளிடம் அதிக அளவில் நெல் கொள்முதல் செய்வதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து விவசாயிகள் ஏற்கனவே மறியல் போராட்டம் நடத்தினர். ஆனாலும் இந்த முறைகேடு தொடர்ந்து நடந்து வந்துள்ளது.

எனவே, தண்டராம்பட்டு பகுதி விவசாயிகள் கடந்த 3-ந் தேதி திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷிடம் புகார் மனு அளித்தனர். இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திட தண்டராம்படடு தாசில்தார் மலர்கொடி தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை கலெக்டர் அமைத்தார்.

அதிகாரிகள் விசாரணை

அதைத்தொடர்ந்து நேற்று தாசில்தார் மலர்கொடி, வேளாண்மை உதவி இயக்குனர் ராம் பிரபு, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் பிரபாகர் ஆகியோர் கொண்ட குழுவினர் தண்டராம்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது நிலைய மேற்பார்வையாளர் செல்வகுமாரிடம் விசாரணை செய்தனர்.

பின்னர் சிட்டா, அடங்கல் கொடுத்து பதிவு செய்த விபரம், கலெக்டரிடம் மனு அளித்தவர்களின் விவரம், உண்மையான விவசாயிகள் யார் என விவசாயிகளை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் உங்களுடைய நெல் கொள்முதல் செய்வதற்கான நாள், நேரம் போன்ற விவரங்கள் போன் மூலமாக தகவல் தெரிவிக்கிறோம் என்று கூறி விவசாயிகளை அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story