திருவாரூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு


திருவாரூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 8 July 2021 9:02 PM IST (Updated: 8 July 2021 9:02 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.

திருவாரூர்,

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கட்டிடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கட்டிடத்தின் மேல் தளத்தில் பெயிண்டிங் வேலை நடைபெற்று வந்தது.

இந்த பணியில் திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 20) என்பவர் நேற்று முன்தினம் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவர் கட்டிடத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த சதீசை சக தொழிலாளர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன்றி நேற்று சதீஷ் உயிரிழந்தார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story