தரைப்பாலம் திடீரென உள்வாங்கியது


தரைப்பாலம் திடீரென உள்வாங்கியது
x
தினத்தந்தி 8 July 2021 10:43 PM IST (Updated: 8 July 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே தரைப்பாலம் திடீரென உள்வாங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மணல்மேடு: மணல்மேடு அருகே தரைப்பாலம் திடீரென உள்வாங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தரைப்பாலம் உள்வாங்கியது
மணல்மேடு அருகே பாலாகுடி கிராமத்தில் இருந்து பன்னீர்வெளி செல்ல சாலை உள்ளது. இந்த சாலை மயிலாடுதுறை- மணல்மேடு சாலையில் இருந்து பிரிந்து மேலாநல்லூர் வரை செல்கிறது. இந்த சாலையையொட்டி பாலாகுடி பிள்ளையார்கோவில் குளம்  உள்ளது.  இந்த குளத்துக்கும், பாலாகுடி வாய்க்காலுக்கும் இடையே செல்லும் சாலையில் தரைப்பாலம் உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தரைப்பாலம் திடீரென உள்வாங்கியது. இதனால் சாலையில் வெடிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மண் அரிப்பு
இந்த குளத்தை தூர்வாரும்போது அதிகமான ஆழத்தில் மண் தோண்டி எடுக்கப்பட்டதால் தான் தரைப்பாலம் உள்வாங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்த பகுதியில் மக்கள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிள்ளையார்கோவில் குளம் தூர்வாரியபோது அதிக அளவில் மண் எடுக்கப்பட்டது. இதனால் பாலாகுடி வாய்க்கால் ஆழத்தை விட குளத்தின் ஆழம் அதிகமாக இருந்ததால் பாலம் வழியாக தண்ணீர் வேகமாக சென்ற போது பாலத்தின் கீழ் பகுதி மற்றும் பக்கவாட்டிலும் மண் அரிப்பு ஏற்பட்டு பாலம் உள்வாங்கி உள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பாலம் மற்றும் சாலையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story