தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்,
பெட்ரோல்- டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்தும், இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தொ.மு.ச. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. பேரவை துணைத்தலைவர் ராசவேலு தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் ஞானப்பிரகாசம் வரவேற்றார். சலவை தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், மாவட்ட கவுன்சில் தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு போக்குவரத்துக்கழக தொ.மு.ச. பொதுச்செயலாளர் பிரபா தண்டபாணி, தலைவர் ஞானசேகரன், பொருளாளர் ஜான்போஸ்கோ, மின்வாரிய தொ.மு.ச. நிர்வாகிகள் வேல்முருகன், சண்முகம், நுகர்பொருள் கழக தொ.மு.ச. நிர்வாகி திருஞானம், நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ஶ்ரீதர், டாஸ்மாக் பணியாளர் சங்க நிர்வாகி வெங்கடேசன் உள்பட அனைத்துப்பிரிவு தொழிலாளர்களும் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story