சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி கைது


சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 8 July 2021 11:09 PM IST (Updated: 8 July 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

2-வது திருமணம் செய்து சிறுமியை கர்ப்பிணியாக்கிய தேனியை சேர்ந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தேனி: 

தேனி கருவேல்நாயக்கன்பட்டி முத்துராமலிங்கத்தேவர் 4-வது தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் ராஜ்கமல் (வயது 31). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பிரியா (25). இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் ஆனது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

இதனால், இவர்களுக்கான விவகாரத்து வழக்கு தேனி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், ராஜ்கமல் 17 வயது சிறுமியை 2-வது திருமணம் செய்துள்ளார். தற்போது அந்த சிறுமி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு புகார் சென்றது.

 அதன்பேரில் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து பிரியா குழந்தைகள் நலக்குழுவில் புகார் செய்தார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அதன்பேரில் இந்த சம்பவம் குறித்து போக்சோ, குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் ராஜ்கமல், அவருடைய தந்தை இளங்கோவன், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தந்தை உள்பட 5 பேர் மீது தேனி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் ராஜ்கமலை போலீசார் கைது செய்தனர். 

Next Story