வட்டார வளர்ச்சி அலுவலர் கொரோனா தொற்றால் பலி


வட்டார வளர்ச்சி அலுவலர் கொரோனா தொற்றால் பலி
x
தினத்தந்தி 8 July 2021 11:11 PM IST (Updated: 8 July 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

வட்டார வளர்ச்சி அலுவலர் கொரோனா தொற்றால் பலி

ராமநாதபுரம்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தவர் அப்துல் ஜப்பார்(வயது 57). மாற்றுத்திறனாளி. இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் ஆஸ்பத்திரியிலும் பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார். கொரோனா தொற்று காலத்தில் மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வர விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையிலும் மாற்றுத்திறனாளியான அப்துல்ஜப்பார் அதனை பொருட்படுத்தாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் பணியை மேற்கொண்டார். இதில் அவருக்கு தொற்று ஏற்பட்டு பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல்ஜப்பார் கொரோனா தொற்றுக்கு பலியானதை தொடர்ந்து ராமநாதபுரத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Next Story