காரைக்குடி,
கோட்டையூர் பேரூராட்சி பகுதிகளில் அதன் செயல் அலுவலர் கவிதா தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள், வணிக நிறுவனங்களில் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றனவா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் பயன்பாட்டில் இருந்த பாலித்தீன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அதனை பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டு, விழிப்புணர்வு குறித்த துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.