தீவைத்து எரிக்கப்பட்ட பெண் சாவு


தீவைத்து எரிக்கப்பட்ட பெண் சாவு
x
தினத்தந்தி 8 July 2021 11:54 PM IST (Updated: 8 July 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் அருகே கள்ளக்காதல் பிரச்சினையில் தீவைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போடிப்பட்டி
மடத்துக்குளம் அருகே கள்ளக்காதல் பிரச்சினையில் தீவைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
கள்ளக்காதல்
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கொழுமம் ருத்ராபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்வயது 36. கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ஞானசுந்தரி. இவர்களுக்குத் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை குழந்தை இல்லை.
இந்தநிலையில் செல்வராஜுக்கு கொழுமம் பகுதியை சேர்ந்த நிஷா  30 என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ள தொடர்பாக மாறியது. 
இந்த விஷயத்தால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கடந்த 2ந் தேதி இரவு  நிஷா மீது ஞானசுந்தரி மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியுள்ளார்.இதில் பலத்த காயமடைந்த நிஷா கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கொலை வழக்கு
இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிஷா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனையடுத்து ஞானசுந்தரி மீதிருந்த கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக போலீசார் மாற்றி ஞானசுந்தரியை கொலை வழக்கில் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து குமரலிங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story