சட்டக்கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
அரவக்குறிச்சி அருகே ஆன்லைன் மூலம் கட்டிய தேர்வு கட்டணம் வரவு ஆகாததால் சட்டக்கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அரவக்குறிச்சி
சட்டக்கல்லூரி மாணவர்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள ஆண்டிபட்டிகோட்டையை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் பாலாஜி (வயது 22). இவர் திருச்சியில் உள்ள சட்டக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். பாலாஜி தனது தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் கட்டியுள்ளார். ஆனால் அந்த பணம் இவருடைய தேர்வு கட்டணத்தில் வரவு ஆகவில்லையாம். இதனால் தேர்வு எழுத முடியாது என பாலாஜி மனமுடைந்து காணப்பட்டார். இதையடுத்து கடந்த 6-ந்தேதி வாண்டராச்சினம்பட்டியில் உள்ள தங்களது தோட்டத்தில் வைத்து பூச்சி மருந்தை (விஷம்) குடித்துள்ளார்.
சாவு
பின்னர் பாலாஜி தனது தந்தையிடம், தான் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தண்டபாணி தனது மகனை மீட்டு பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவு பாலாஜி பரிதாபமாக இறந்தார்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story