மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாலுகா செயலாளர் சுடலைராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மாவட்ட செயலாளர் சங்கர பாண்டியன், வக்கீல் பிரிட்டோ ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.
ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடிய ஸ்டான் சாமியை மத்திய அரசு உபா சட்டத்தின் கீழ் கைது செய்து மும்பை சிறையில் அடைத்தது. சிறையில் ஸ்டான் சாமி உடல்நலக்குறைவால் இறந்தார். இதனைக் கண்டித்தும், சட்டப்படி மனித உரிமைகளுக்காக போராடியவர்களை கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும். இதுபோன்ற மனித உரிமைகளுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெற வேண்டும். ஸ்டான் சாமி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story