அரசு பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


அரசு பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 9 July 2021 12:35 AM IST (Updated: 9 July 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் அரசு பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்
பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை
கரூர் வடக்கு காந்திகிராமம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் சிவலிங்கம் (வயது 18) இவர் கரூர் மாவட்டம், காணியாளம்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவலிங்கம் தனது செல்போனில் கேம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். 
இதனால் சிவலிங்கத்தை அவரது தந்தை தர்மராஜ் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சிவலிங்கம் நேற்று முன்தினம் காலை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவலறிந்த பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சிவலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்த புகாரின்பேரில் பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விாசரணை நடத்தி வருகின்றனர். செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் மாணவர் தற்கொலை செய்து  கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story