வாலிபர் கொலை வழக்கில் மேலும் 6 பேர் கைது


வாலிபர் கொலை வழக்கில் மேலும் 6 பேர் கைது
x
தினத்தந்தி 9 July 2021 12:43 AM IST (Updated: 9 July 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் கொலை வழக்கில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணராயபுரம் 
கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டியில் மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பிரபு (வயது 35) என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மணவாசியை சேர்ந்த 5 பேரை மாயனூர் போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். இந்தநிலையில் மேலும், இக்கொலை வழக்கு தொடர்பாக நேற்று மணவாசியை சேர்ந்த சந்தானத்துரை என்கிற செந்தமிழ் (24), மல்லீஸ்வரன் (24),  இளவரசன் (23), பாலமுருகன் (24), பெரியசாமி (21), கருணாமூர்த்தி (24) ஆகிய 6 பேரை மாயனூர் போலீசார் கைது செய்து, கிருஷ்ணராயபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, கரூர் கிளை சிறையில் அடைத்தனர். இக்கொலை சம்பந்தமாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story