விஷம் குடித்த முதியவர் சாவு
விஷம் குடித்த முதியவர் இறந்தார்
வெள்ளியணை
உப்பிடமங்கலம் அருகே உள்ள லிங்கத்தூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 70). இவருடைய மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய 3 மகன்களும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். மகன்களின் ஆதரவில் இருந்த இவரை கடந்த சில நாட்களாக சரியாக பராமரிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால்மனவேதனையடைந்த ஆறுமுகம் கடந்த 6-ந்தேதி இரவு வீட்டில் பூச்சி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகம் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story